புகை மூட்டம்: சீ விளையாட்டுப் போட்டிக்கு கடும் மிரட்டல்! -அமைச்சர் கைரி

மலேசிய அரங்கம்
Typography

 

கோலாலம்பூர், ஆக.9- சீ விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், மெல்ல தலைவிரித்திருக்கும் இந்தோனேசியாவின் புகை மூட்டம், மலேசியாவுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

இந்த முறை சீ விளையாட்டை மலேசியாவில் நடைபெறவிருப்பதால் அதற்கான முன்னேற்படுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தோனேசியாவில் சுத்தம் செய்வதற்காக பல பயிர் நிலங்கள் எரிக்கப்பட்டு வருதால் அதிலிருந்து வெளிவரும் புகை மூட்டம் மலேசியாவையும் சூழ வாய்ப்புள்ளது என அவர் கூறினார்.

என்னதான், இந்தப் புகை மூட்டம் மலேசியாவிற்கு வாடிக்கையான பிரச்சனையாகி விட்டாலும். இப்போது அது முற்றாக தவிர்க்கப்பட வேண்டிய விஷயமாகும். ஏனெனில், புகை மூட்டத்தின் விளைவால் சீ விளையாட்டின் போது போட்டியாளர்களுக்குச் சுகாதாரச் சிக்கல் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதனால் சீ விளையாட்டை சுமூகமாக நடத்த சிரமம் ஏற்படும் என்று கைரி தெளிவுபடுத்தினார்.

இதனிடையே, இந்தோனேசியாவில் நிகழும் திறந்த காடு எரிப்பை கட்டுப்படுத்தி, சிக்கலைத் தவிர்க்குமாறு அவர் இந்தோனேசியாவைக் கேட்டுக் கொண்டார். இந்தப் போட்டியில் இந்தோனேசியாவும் கலந்து கொள்ளவிருப்பதால் ஒருவேளை அந்தப் புகை மூட்டம் சீ விளையாட்டை பாதித்தால் அது இந்தோனேசியாவிற்கும் அவமானமே என்றார் அவர்.

இதனிடையே, வரும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி தொடங்கும் சீ விளையாட்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரையிலும் நடைபெறவிருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS