உலகத் தமிழர் பேட்மிண்டன் போட்டி:  ‘மலேசிய போலே’- நிரூபித்தார் விநாயகன்!

மலேசிய அரங்கம்
Typography

ரோக் பார்க் (கனடா), ஆக.12- கனடாவில் நடந்த உலகத் தமிழர் பேட்மிண்டன் போட்டியின் ‘மலேசியா போலே’ என்பது மீண்டும் ஒருமுறை  நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த உலகத் தமிழர் பேட்மிண்டன் போட்டியின் இரட்டைப் பிரிவில் மலேசியா சாம்பியனாக வாகை சூடியது. 

மலேசிய வீரர் விநாயகன் பெரியசாமி இறுதியாட்டத்தில் மலேசியாவின் வெற்றி குறித்து லண்டனிலுள்ள மலேசிய இந்தியர்கள் கிளப் (MIC) தகவலை வெளியிட்டிருப்பதோடு இது குறித்து தங்களின் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர். இங்கிலாந்தில் மலேசியர்களின் ஒருங்கிணைத்து சேவை செய்யும் அமைப்பாக மலேஇய இந்தியர்கள் கிளப் விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பின்னர் வெற்றி மேடையில் மலேசிய இணையர்கள், மலேசிய தேசிய கொடியைப் பெருமையுடன் ஏந்தி நின்றனர். விநாயகன் பெரியசாமி முன்னாள் சிலாங்கூர் மாநில பேட்மிண்டன் ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டியைக் கனடாவின் ஸ்கார்புரோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான கேர்ரி ஆனந்த சங்கரி தொடக்கிவைத்தார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்ப் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த உலகத் தமிழர் பேட்மிண்டன் போட்டி ஐந்தாவாது ஆண்டாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS