மலேசியாவின் தங்க வேட்டை ஆரம்பம்! 'சின்லோன்' போட்டியில் முதல் தங்கம்!

மலேசிய அரங்கம்
Typography

 கோலாலம்பூர், ஆக.16- கோலாலம்பூரில் நடக்கும் 29ஆவது சீ விளையாட்டுப் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்துடன் மலேசியா தனது அதிரடி வெற்றிப் பயணத்தைத் தொடங்கிவிட்டது. செப்பாக் தக்ராவ் 'சின்லோன்'  என்றழைக்கப்படும் பிரம்புப் பந்து வட்டப் போட்டியில் மலேசியா தனது முதலாவது சீ விளையாட்டுத் தங்கத்தை இன்று வாகைசூடியது.

கோலாலம்பூர் சீ விளையாட்டுப் போட்டி அதிகாரப்பூர்வமாக 19ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் சில போட்டிகள் முன்கூட்டியே தொடங்கி தற்போது நடந்து வருகின்றன.

அந்த வகையில் தித்திவங்சா உள்ளரங்கத்தில் நடந்த சின்லோன் போட்டியின் இறுதியாட்டத்தில் 391 புள்ளிகளை எடுத்து மலேசியா முதலிடத்தைப் பிடித்ததன் வழி தங்கத்தை வென்றது.  'ஜாலோர் கெமிலாங்' வெற்றிக் கொடி உயரப் பறந்தது.

இரண்டாவது இடத்தைப் பிடித்த பிலிப்பைன்ஸ் 271 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இந்த சின்லோன் என்ற பிரம்புப் பந்து வட்டப் போட்டியின் பூர்வீகம் பியன்மார் ஆகும்.

ஒரு வட்டத்திற்குள் இருந்து, ஆறு ஆட்டக்காரர்கள் பிரம்புப் பந்தை காலில் தட்டித் தட்டி தரையில் விழாமல் விளையாடவேண்டும் இந்தப் போட்டியில் மலேசியா இதுவரை தங்கம் வென்றது கிடையாது, இதுவே முதன் முறையாகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS