SMC-யின் பூப்பந்து கிண்ண போட்டி; சிலாங்கூரில் காஜாங் தமிழ்ப்பள்ளி வெற்றி!

மலேசிய அரங்கம்
Typography

கோலாலம்பூர், அக்.5- ஶ்ரீ முருகன் நிலையத்தின் இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்த எஸ்.எம்.சி கிண்ண பூப்பந்து போட்டியில் சிலாங்கூர் மாநில அளவில் காஜாங் தமிழ்ப்பள்ளி வெற்றி வாகை சூடியது.

ஶ்ரீ முருகன் நிலைய ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த போட்டி விளையாட்டில் இவ்வாண்டு மொத்தம் 142 பள்ளிகள் கலந்து கொண்டன. மாநில அளவில் நடத்தப்பட்ட இந்த பூப்பந்து போட்டியில், சிலாங்கூர் மாநிலத்திற்கான போட்டி கடந்த ஆகஸ்டு 30ஆம் தேதி பூச்சோங்கில் நடைபெற்றது. இப்போட்டிக்கு பிரதமர் துறையின் துணையமைச்சர் செனட்டர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி சிறப்பு வருகை புரிந்தார்.

போட்டியில் நிறைய பள்ளிகள் உற்சாகமாக பங்கு கொண்ட நிலையில் காஜாங் தமிழ்ப்பள்ளி வெற்றியாளராக வாகை சூடியது. மேலும், இரண்டாவது நிலையில் பூச்சோங் தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஜொகூர் மாநில அளவிலான போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளி முதல் நிலையிலும் துன் அமீனா தமிழ்ப்பள்ளி இரண்டாம் நிலையிலும் வெற்றி பெற்றன. 

மலாக்கா மாநில போட்டியில் மலாக்கா குபு பள்ளி முதல் நிலையில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் புக்கிட் லிந்தாங் பள்ளி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS