மலேசியக் கிண்ண வெற்றி! ஜொகூரின் இன்று விடுமுறை!

மலேசிய அரங்கம்
Typography

ஜொகூர்பாரு, நவ.5- மலேசிய கிண்ணக் கால்பந்து போட்டியில் 26 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றி ஜே.டி.டி எனப்படும் ஜொகூர் டாருள் தக்ஸிம் குழு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஜொகூர் மாநிலத்தில் இன்று மாநில பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஜே.டி.டி. குழுவின் இந்த வெற்றிக்காக ஜொகூர் பெருமை கொள்கிறது என்று கூறிய மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின், ஜொகூர் குழுவின் மீது அதிகப் பற்று வைத்து அதை ஆதரித்து வரும் கால்பந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். 

தொடர்ந்து ஜே.டி.டிக்கு ஆதரவு நல்கிவரும் ஜொகூர் சுல்தானுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். 

நேற்றிரவு ஷாஆலம் அரங்கத்தில் கெடா குழுவுக்கு எதிராக நடந்த இறுதியாட்டத்தில் ஜே.டி.டி குழு 2-0 என்ற கோல் கணக்கில் வாகை சூடி மலேசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜொகூர் அய்டில் ஷாபுவானும்யார்ஜெண்டினா வீரர் கொன்ஷாலோ கப்ரேராவும் கோல்களை அடித்து, 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக மலேசியக் கிண்ணச் சாம்பியன் பட்டத்தை ஜொகூர் வெல்ல உதவினர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இறுதியாட்டத்தில் தோல்வி கண்டு வரும் கெடாவுக்கு நேற்றைய இரவு மிகவும் ஏமாற்றமான ஓர் இரவாக அமைந்தது. 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS