கார் மோதி 'மரோத்தோன்' வீரர்கள் காயம்: ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை!

மலேசிய அரங்கம்
Typography

 

கோலாலம்பூர், டிசம்.11- மூன்று நெடுந்தூர ஓட்டக்காரர்கள் மீது கார் மோதிப் படுகாயம் அடைந்த சம்பவத்திற்கு காரணாமான கிள்ளான் அனைத்துலக மரோத்தோன் ஓட்டப் போட்டியை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்கள், அப்போட்டியை நடத்துவதற்கான லைசென்சுக்கு விண்ணபிக்கவே இல்லை என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நடைபெறும் விளையாடு நிகழ்ச்சிகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும் விளையாட்டுத்துறை ஆணையத்தின் அங்கீகாரம் இல்லாமலேயே இந்தப் போட்டி நடந்துள்ளது என்று விளையாட்டுத்துறை ஆணையர் டத்தோ ஜைத்தோன் ஒஸ்மான் சொன்னார்.

இந்த மரோத்தோன் போட்டியின் போது மூன்று ஓட்டக்காரர்கள் காரினால் மோதப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் எவிலின் ஆங் என்ற பெண் ஓட்டக்காரர் மிகக் கடுமையான காயங்களுக்குள்ளாகி கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

1997ஆம் ஆண்டின் விளையாட்டு மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு விளையாட்டுப் போட்டி நடத்தப்படும் போது அதற்கான அங்கீகாரத்தை ஆணையத்திடமிருந்து பெறவேண்டும் மேலும் சம்பந்தப்பட்ட விளையாட்டு சங்கம், போலீஸ், ஊராட்சி மன்றம் ஆகியவற்றின் அனுமதியையும் அவர்கள் பெறவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

விதிமுறைகளை மீறி கிள்ளானில் மரோத்தோன் போட்டியை நடத்திய ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ ஜைத்தோன் ஒஸ்மான் குறிப்பிட்டார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS