ஹாக்கி துணைப் பயிற்சியாளர் பொறுப்பு பறிப்பு: கோபிநாத் வருத்தம்

மலேசிய அரங்கம்
Typography

கோலாலம்பூர், ஜன.24- தேசிய மகளிர் ஹாக்கி குழுவின் துணைப் பயிற்சியாளர் பதவிக்கான ஒப்பந்தத்தை மீண்டும் மலேசிய ஹாக்கி சம்மேளனம் தமக்கு புதுப்பிக்கவில்லை என்று இமான் கோபிநாதன் உறுதிப்படுத்தினார்.  

கடந்த இரண்டு மாதங்களில், மூன்று துணைப் பயிற்சியாளர்களை மலேசிய ஹாக்கி  சம்மேளனம், அவர்களின் வேலையிலிருந்து வெளியேற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கான ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாதது குறித்த மலேசிய ஹாக்கி சம்மேளனம் வழங்கிய பதிலில் தமக்கு திருப்தி இல்லை என்று 40 வயதான கோபிநாதன் கூறினார். 

"அவர்களின் காரணங்கள் என்ன என்பதை நான் வெளிப்படையாக கூற முடியாது. இருந்த போதிலும், அவை அனைத்தும் நியாயமான காரணங்களாக எனக்கு தோன்றவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது போல் நான் இல்லை. நான் அதை விட திறமைசாலி என்ற நம்பிக்கை என்னுள் உண்டு. என்னால், தேசிய ஹாக்கி  அணி, குறிப்பாக மகளிர் அணிக்கு நல்ல மேம்பாடை கொண்டு வர முடியும்" என்றார் அவர். 

"நம் நாட்டின் ஹாக்கி அணி, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்து, நாட்டிற்கு பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் முதலில் இந்தப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். எனது முயற்சி எப்போதும் தொடரும். எனக்கான வாய்ப்பு மீண்டும் வந்தால், கண்டிப்பாக நாட்டின் தேசிய ஹாக்கி  அணிக்கு நான் பெருமைத் தேடித் தருவேன்" என்று கோபிநாதன் உறுதியளித்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS