மிஃபா கால்பந்து அணியின் ஜெர்சிகளை டத்தோஶ்ரீ சுப்ரா வெளியிட்டார்!

மலேசிய அரங்கம்
Typography

சுபாங் ஜெயா ஜன. 29-  பிரிமியர் லீக் 2018-இல் கால்பந்துக் களத்தில் இறங்கியுள்ள மிஃபா அணியின் ஜெர்சி வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் சுபாங் ஜெயா ஒன் சிட்டி வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மஇகாவின் தேசியத்தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம்,  மிஃபாவின்  ஜெர்சியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

விளையாட்டுத் துறையின் வழி சமுதாயத்தில் பல மாற்றங்களை உருவாக்கலாம். அந்த வகையில் மிஃபா கால்பந்து அணி சமுதாயத்தின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இதன் வழி ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவோம். இதற்கு துணை நிற்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும்  குறிப்பாக 'மாசா' பல்கலைக்கழகத்தின் தலைவர் டான்ஶ்ரீ  டாக்டர் ஹாஜி முகமட் ஹனிபா  இவர் மிஃபாவிற்கு பெரிய அளவில் உதவிக்கரம் நீட்டியுள்ளார்  என அவர் கூறினார்.

மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் உரையாற்றுகையில் மிஃபாவின் வளர்ச்சிக்கு துணை நின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.  டத்தோஶ்ரீ சுப்பிரமணியம்  மிஃபாவிற்காக எல்லா நிலைகளிலும் உதவிகளை செய்து வருகிறார். டத்தோ எம்.சரவணனின்  உதவியும் மிஃபாவிற்கு பக்க பலமாக இருந்துள்ளது. டான்ஶ்ரீ  டாக்டர் ஹாஜி முகமது ஹனிபா அவர்கள் இந்த வருடம் பேருதவி புரிந்துள்ளார். 

இந்த வருடம் கே.தேவன்  பயிற்சியில் மிஃபா அணி வலுப்படுத்தப்பட்டு வருகிறது. நிச்சயமாக  இந்த வருடம் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அது நிலைநாட்டும்.  இன்னும் சில ஆண்டுகளில் அதிகமான தரமான இந்திய விளையாட்டாளர்களை மிஃபா உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், முன்னாள் கால்பந்து வீரர்களான டத்தோ சந்தோக் சிங், டத்தோ தனபாலன்,  மிஃபாவின் துணைத்தலைவர் தினகரன், மிஃபாவின் செயலாளர் அன்பானந்தன், உதவித் தலைவர்களான டத்தோ பதி, ஆறுமுகம், மிஃபா அணியின் மேலாளர் ஏ.எஸ்.பி  ராஜன்,  பயிற்றுநர் கே.தேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

      

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS