ஜொகூர் இளவரசருக்கு 'அஸ்டின் மார்டின்'  கார் பரிசளிப்பு!  

மலேசிய அரங்கம்
Typography

கோலாலம்பூர், பிப்.5- ஜேடிடி என்றழைக்கப்படும் ஜொகூர் டாருல் தக்ஸீம் கால்பந்து குழுவின் விளையாட்டாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஜொகூர்  இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமிற்கு, அஸ்டின் மார்டின் (Aston Martin) ஆடம்பரக் காரைப் பரிசளித்தனர்.   

கடந்த வாரம் அந்தக் கால்பந்து குழுவினர், தங்களின் பத்தாவது வெற்றிக் கிண்னத்தை கோப்பையை வென்றனர். அந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஜொகூர் இளவரசருக்கு அந்தக் கார் பரிசளிக்கப்பட்டுள்ளது. 

"ஜொகூர் இளவரசருக்கு இன்ப அதிர்ச்சியை தரும் வண்ணம், ஜேடிடி கால்பந்து குழுவினர், நீலம் மற்றும் சிவப்பு வண்ணத்திலான அந்த ஆடம்பரக் காரை பரிசளித்துள்ளனர்.

 இந்த நீலம் மற்றும் சிவப்பு வண்ணமானது, ஜொகூர் மாநிலத்தின் கொடியின் வண்ணத்தைப் பிரதிபலிக்கிறது" என்று 'சவுத்தர்ன் ஜொகூர் டைகர்ஸ்' முகநூல் அகப்பக்கம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த சனிக்கிழமையன்று, மலேசிய சூப்பர் லீக் கால்பந்து விளையாட்டின் போது, கெடா மாநில கால்பந்து குழுவினை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் ஜேடிடி தோற்கடித்து, அக்குழுவின் 10-ஆவது வெற்றிக் கிண்ணத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS