ஆசிய போட்டி: ஜி.அரவின் வெண்கலப் பதக்கம் வென்றார்!

மலேசிய அரங்கம்
Typography

கோலாலம்பூர், பிப்-14 – இந்தோனிசியா  தலைநகரான ஜக்கர்த்தாவில் நடந்த 18-ஆவது பொது அழைப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் ஜி. அரவின் தேவர்  200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். 

ஈப்போவைச் சேர்ந்த 25 வயதுடைய அரவின் 200 மீட்டர் தூரத்தை 21.67 வினாடிகளில் ஓடி முடித்தார். இந்தப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து தைவானைச் சேர்ந்த யாங் சுன் ஹான் தங்கப் பதக்கத்தை வென்றார். இவர் 20.88 வினாடிகளில் 200 மீட்டரைக் கடந்தார்.

ஹாங்காங்கின் சன் ஹா சூன் 21.47 வினாடிகளில்  ஓடி 2-ஆவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அரவினின் வெண்கலப் பதக்க வெற்றியை அவரது பயிற்சியாளர் எம். பாலமுருகன் பாரட்டினார்.

 இவ்வாண்டில் 400 மீட்டர் ஓட்டத்தில் மட்டுமே அரவின் கவனம் செலுத்தி வந்தார் என்றும் இருப்பினும் 200 மீட்டரில் வெண்கலப்பதக்கத்தை அவர் கைப்பற்றியது தமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS