அதிரப் போகிறது பேட்மிண்டன் அரங்கம்! இன்று லீ சோங் - லின் டான் 'யுத்தம்'

மலேசிய அரங்கம்
Typography

 கூச்சிங், ஏப்ரல்,9- மலேசியர்கள் உள்பட உலகளவில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பேட்மிண்டன் யுத்தத்தில் இன்று மலேசிய வீரர் லீ சோங் வெய்யும் சீன வீரர் லின் டானும் மோதுகின்றனர்.

கூச்சிங்கில் பெட்ரா அரங்கத்தில் இன்று இரவு நடக்கும் மலேசிய பொது பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் மூத்த பேட்மிண்டன் வீரரகளான லீ சோங்கும் லின் டானும் மோதுவதைக் காண உலகளவில் ரசிர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

நல்ல நண்பர்களாக இருந்தாலும், பேட்மிண்டன் களத்தில் பரம வைரிகளாக விளங்கிவரும் இவர்கள் இருவரின் மோதல்கள் கடந்த காலங்களில்லும் பெரும் பரப்பரப்பாக அமைந்து வந்துள்ளன.

இன்றைய ஆட்டத்தில் வென்றால், லீசோங் வெய் 12ஆவது முறையாக மலேசிய பொது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தவராவார்.

அதேவேளையில், லின் டான் வென்றால் மலேசிய பொது சாம்பியன் பட்டத்தை அவர் வாகைசூடுவது இதுவே முதன்முறையாக இருக்கும். இதுவரை லின் டான் கைப்பற்றாமல் போனது மலேசிய சாம்பியன் பட்டம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஹாங்காங்கின் வின்செண்ட் வோங்கை 21-12, 21-9 என்ற புள்ளிகளில் வென்று இறுதியாட்டத்திற்குள் நுழைந்தார் லீ சோங் வெய்.

மற்றொரு அரையிறுதி மோதலில் லின் டான் 27-25, 19-21, 21-16 என்ற புள்ளிகளில் கடும் போரட்டத்திற்குப் பின்னர் தென் கொரியாவின் சோன் வான் ஹோவை வீழ்த்தினார்.

லின் டான் மிகச் சிறப்பாக விளையாடுகிறார். அவரது அரையிறுதி ஆட்டம், அவரது வலுவான நிலையைக் காட்டுகிறது. எங்கள் இருவருக்குமே வயதாகி விட்டது. இந்நிலையில் இளைஞர்களை வீழ்த்தி இருவரும் இறுதியாட்டத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் லீ சோங் வெய்.

நாங்கள் இருவரும் மோதுவதைக் காண ரசிகர்கள் எப்போதுமே ஆசைப்படுகிறார்கள். நாங்கள் பலமுறை மோதிவிட்டோம். இப்போதெல்லாம் மலேசிய ரசிகர்கள் என்னை விரோதமாக பார்த்ததில்லை. எனக்கு அவர்கள் மத்தியில் நிறைய ஆதரவு உள்ளது என்றார் லின் டான். 

BLOG COMMENTS POWERED BY DISQUS