மீண்டும் லீ சோங் வெய் தோல்வி! லின் டான் கையே ஓங்கியது!

மலேசிய அரங்கம்
Typography

கூச்சிங், ஏப்ரல்.9- மலேசிய பொது பேட்மிண்டன் போட்டியின் ஒற்றையர் இறுதியாட்டத்தில் மலேசியாவின் முன்னணி வீரரும் மூத்த வீரருமான லீ சோங் வேய் சீனாவின் மூத வீரர் லின் டனிடம் தோல்விகண்டார்.

இந்தப் போட்டியில் மீண்டும் உச்சநிலையிலான ஓர் ஆட்டத்தை வழங்கிய லின் டான் 21-19 மற்றும் 21-14 என்ற புள்ளிகளில் லீ சோங் வெய்யை வென்றார். 

உலக ரீதியில் முக்கிய பேட்மிண்டன் போட்டிகள் அனைத்திலும் வென்றுள்ள லின் டான், இதுவரை மலேசிய பொதுப் போட்டியில் வென்றதே இல்லை. இன்று அந்த இலக்கையும் அவர் அடைந்தார்.

லீ சோங்கிற்கு எதிராக 36 முறை விளையாடி இருக்கும் லின் டான் 25 ஆவது முறையாக அவரை வென்றுள்ளார். 

எப்போதுமே லீ சோங் வெய்க்கு எதிராக விளையாடும் போது நான் சிறந்த ஆட்டத்தையே வழங்கி வந்துள்ளேன். அது மீண்டும் ஒருமுறை நிருபிக்கப் பட்டிருக்கிறது என்றார் லின் டான்.

"தொடக்க செட்டில் நான் முன்னிலை வகித்த நிலையில் சில தவறுகளால் அந்த செட்டை இழந்தேன். இந்த தொடக்க செட் தான் மிக முக்கியமானது. அதை இழந்தது தான் எனது தோல்விக்குக் காரணம் என்று லீ சோங் வெய் சொன்னார்.

இதனிடையே தாங்கள் பேட்மிண்டன் அரங்கில் மூத்த ஆட்டக்காரர்களாக விளங்கிய போதிலும் இப்போதைக்குத் தாங்களிடம் ஓய்வு பெறும் திட்டம் எதுவுமில்லை என்று இருவருமே அறிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS