தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு SMC நடத்தும் பூப்பந்து போட்டி

மலேசிய அரங்கம்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல் 11- தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக பூப்பந்து போட்டி ஒன்றை ஶ்ரீ முருகன் நிலையமும் மலேசிய இந்திய பூப்பந்து சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இதற்கான அறிமுக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஶ்ரீ முருகன் நிலைய தலைமையகத்தில் நடைபெற்றது.

மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் என இரண்டு பிரிவுகளாக இந்த போட்டி நடத்தப்படும். மாநில நிலையில் தகுதியாளர் சுற்று நடத்தப்பட்டு அதில் வெற்றிப் பெறுபவர்கள் தேசிய நிலையான இறுதிச் சுற்றில் பங்கெடுப்பார்கள்.

இவ்விரண்டுப் பிரிவுகளிலும் வெற்றிப் பெறுபவர்களுக்கு ரொக்கப் பணம் பரிசாக அளிக்கப்படுவதோடு தேசிய நிலை வெற்றியாளருக்கு சுழற்கிண்ணமும் வழங்கப்படும்.

தமிழ்ப் பள்ளி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் ஆர்வம் செலுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த பூப்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்படுவதாக மலேசிய இந்திய பூப்பந்து சங்கத்தின் தலைவர் தனபாலன் கூறினார்.

இந்த அறிமுக விழாவிற்கு ஶ்ரீ முருகன் நிலைய இளைஞர் பிரிவு ஒருங்கிணப்பாளர் சுரேன், மலேசிய இந்திய பூப்பந்து சங்கத் தலைவர் தனபாலன், கடந்தாண்டு செல்கோம் அக்சியாத்தா பூப்பந்து போட்டி வெற்றியாளர் தீனா முரளிதரனும் கலந்துக் கொண்டனர்.

இந்த பூப்பந்து போட்டியின் விவரங்களைப் பெற விரும்புவோர் 0175551167 (ரூபன்) மற்றும் 0143304858 (ஷர்வின்) எனும் தொலைப்பேசி எண்களுக்குத் தொடர்புக் கொள்ளலாம் என ஏற்பாட்டாளர் குழு தெரிவித்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS