சீ கேம்ஸ்: இறுதி விழா தேதியில் திடீர் மாற்றம்

மலேசிய அரங்கம்
Typography

புத்ராஜெயா, ஏப்ரல் 11- சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தாண்டு கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் சீ விளையாட்டுப் போட்டி, அறிவிக்கப்பட்டத் தேதியைவிட முன்னதாகவே முடிவடையும் என்று இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

முன்னதாக ஆகஸ்டு 19ஆம் தேதி முதல் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை இந்த விளையாட்டுப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆகஸ்டு 31ஆம் தேதி மலேசிய சுதந்திர தினமாக இருப்பதாலும் செப்டம்பர் 1ஆம் தேதி ஹரி ராயா ஹாஜியாக இருப்பதாலும் இந்த சீ விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் ஆகஸ்டு 30ஆம் தேதியாக மாற்றம் கண்டு, இன்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

மலேசியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகின்ற வேளையில் அதனை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS