கோலாலம்பூர், மார்ச் 12-அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் தோல்வியடைந்த பின்னர், மிகவும் சோர்ந்து போயிருந்த டத்தோ லீ சோங் வெய், அடுத்து இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் இந்திய பொதுப் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.
அதேவேளையில் அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் சுவிஸ் பேட்மிண்டன் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள அவர் முடிவெடுத்திருக்கிறார்.
சுவிஸ் போட்டியில், லீ சோங் வெய் தான் தர வரிசையில் முதல் நிலை ஆட்டக்கார்ர் ஆவார். தொடக்க ஆட்டத்தில் அவர், டென்மார்க் வீர்ர் ராமஸ் ஃபிளெட்பெர்க்குடன் மோதவிருந்தார்.
போட்டியில் பங்கேற்பதற்காக உடல் தகுதியுடன் இல்லை என்பதால் சுவிஸ் போட்டியில் இருந்து விலக அவர் தீர்மானித்தார்.
நீண்ட விவாத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பயிற்சியாளர் ஹெண்ட்ராவான் சொன்னார்.
அகில இங்கிலாந்து போட்டிக்கு சில நாடகளுக்கு முன்னர் லீ காய்ச்சலுக்கு உள்ளானார். அவர் நூறு விழுக்காடு உடல் தகுதியை இன்னமும் எட்டி விடவில்லை என்றார் அவர்.
முதல் சுற்று ஆட்டத்திலேயே இந்தியாவின் சாய் பிரனீத்திடம் 24-22, 22-20 என்ற புள்ளிகளில் லீ தோல்வி கண்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தோல்விக்கு லீ, முன்பு காய்ச்சலில் இருந்ததுதான் காரணம் என்று நாங்கள் சொல்லவில்லை. தோல்வி என்றால் அது தோல்விதான். அதற்கு காரண காரியமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்று ஹெண்ட்ராவான் குறிப்பிட்டார்.
மார்ச் 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடக்கும் இந்திய பொதுப் பேட்மிண்டன் போட்டியில் லீ பங்கேற்கவிருக்கிறார்.