2 வயது மகளை தோளில் சுமந்தவாறு அடுக்கு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை!

உலக அரங்கம்
Typography

மக்காவ், ஆக.8- கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில், சீனாவின் மக்காவ் குடியிருப்புப் பகுதியிலுள்ள அடுக்கு மாடி வீடு ஒன்றிலிருந்து  ஹாங்காங்கைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், தனது இரண்டு வயது மகளை தோளில் தூக்கிக்கொண்டு கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்

காதலியுடன் ஏற்பட்ட தகராறினால் கத்தியால் அவரைத் தாக்கிய பின்னர் அந்த நபர் அடுக்குமாடியில் இருந்து கீழே குதித்தார்.

கோலோனில் அமைந்திருக்கும் வீடமைப்புப் பகுதியில் காதலியுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து சுமார் 34 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் தன்னுடைய காதலியை இறைச்சி வெட்டும் கத்தியால் தாக்கினார்.

அவருடைய காதலி அங்கிருந்து தப்பித்து அடுக்கு மாடியின் நுழைவாயிலை நோக்கி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய 2 வயது குழந்தையைத் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு மேல் மாடியிலிருந்து கீழே குதித்தார்.

சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் உயிரிழந்ததை அடுத்து அவருடைய 2 வயது மகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிர்நீத்தார். அவர்கள் இருவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டதால் இந்தத் தகராறு ஏற்பட்டிருக்கலாம் என்று மக்காவ் போலீஸ் தெரிவித்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS