இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: எகிப்தில் 45 பேர் பரிதாப மரணம்!

உலக அரங்கம்
Typography

கெய்ரோ, ஆக.12- எகிப்தின் கடலோர நகரமான அலெக்சாண்ட்ரியாவில் நிகழ்ந்த இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் சுமார் 45 பயணிகள் பலியாயினர். மேலும் 150 பேர் பலத்த காயமுற்றனர்.

இந்தச் துயரச் சம்பவம் உள்ளூர் நேரப்படி மதியம் 2.15 மணிக்கு நிகழ்ந்துள்ளது. கோர்ஷிட் ரயில் நிலையத்திற்கு அருகே ஒரே தண்டவாளத்தில் பயணித்த அந்த இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தின.

ரயில் தண்டாவளத்தை மாற்றுவதில் ஏற்பட்ட தவறினால்தான் இந்த ரயில் விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவவந்துள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த இரண்டு ரயில்களும் ஒன்றை ஒன்று மோதி அதிலிருந்த பயணிகள் வெளியில் தூக்கி எறியப்பட்டதாக இந்த விபத்தை நேரில் கண்ட பெண் ஒருவர் கூறினர். 
இதனிடையே, விபத்துக்குள்ளான இரயிலில் பயணித்த மவுமன் யூசோப் என்பவர், தான் பயணித்த அந்த ரயில் திடீரென்று வழக்கத்திற்கு மாறாக வேகமாக செல்வதை உணர்ந்த்தாக கூறினார்.. அது ஏன் என்று அறிவதற்குள்ளே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS