சூப்பர் ஸ்டார் ரொனல்டோவுக்கு 5 ஆட்டங்கள் விளையாடத் தடை!

உலக அரங்கம்
Typography

மாட்ரிட், ஆக.15- ஸ்பெய்ன் சூப்பர் கிண்ண கால்பந்து போட்டியின் முதல் கட்ட ஆட்டத்தின் போது நடுவரால் வெளியேற்றப்பட்ட கால்பந்து 'சூப்பர் ஸ்டார்' கிறிஸ்தியானோ ரொனால்டோ, தொடர்ந்து அடுத்த ஐந்து ஆட்டங்களில் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளார்.

பார்சிலோனாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தின் போது ரியல் மாட்ரிட் வீரரான ரொனால்டோ, நடுவரால் முதல் மஞ்சள் எச்சரிக்கை அட்டை பெற்ற பின்னர், ஆட்டம் முடிய 8 நிமிடங்கள் இருக்கும் போது 2ஆவது மஞ்சள் எச்சரிக்கை அட்டையைப் பெற்றதால் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். 

எனவே, இரண்டு மஞ்சள் அட்டையை பெற்றதற்காக அடுத்து வரும் ஓர் ஆட்டத்தில் அவர் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. எனினும், நடுவரால் திடலில் இருந்து வெளியேற்றப்பட்ட போது அந்த நடுவரை முதுகுப்புறம் இருந்து பிடித்துத் தள்ளியதற்காக ரொனால்டோவுக்கு மேலும் நான்கு ஆட்டங்களில் விளையாட இயலாத வகையில் தடை விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக 10 நாள்களுக்குள் ரொனால்டோ மேல் முறையீடு செய்யலாம். அதேவேளையில், நாளை பார்சிலோனாவுக்கு எதிரான இரண்டாம் கட்ட ஆட்டத்தில் அவர் பங்கேற்க இயலாது. மேலும் அடுத்த செப்டம்பர் 20ஆம் தேதி வரை, இடையில் நடைபெறும் 4 ஆட்டங்களில் அவர் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS