உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது:  5ஆவது முறை, வென்றார் ரொனால்டோ!

உலக அரங்கம்
Typography

 

பாரிஸ், டிச.8- ஸ்பெயின் கால்பந்து குழுவான ரியல் மாட்ரிட்டிற்கு விளையாடி வரும் பிரபல கோல் வீரர் கிறிஸ்தியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கான 'பால்லோன் டி'யோர்' (Ballon d'Or) விருதை வென்றார்.

ஆகக் கடைசியாக ரொனால்டோவுக்கு போட்டியாக விளங்கிய மற்றொரு பிரபல ஆட்டக்காரரான பார்சிலோனாவின் லியோனல் மெஸ்சியை வீழ்த்தி இந்த விருதின ரொனால்டோ வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதினை கடந்த ஆண்டிலும் ரொனால்டோ தான் வென்றார். இதுவரை ஐந்து முறை அவர் உலகின் சிறந்த ஆட்டக்காரராக அவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே இந்த விருதினை ஐந்து முறை மெஸ்சி வென்றிருக்கும் நிலையில் ரொனால்டோ இவ்வாண்டு கிடைத்த வெற்றியால் மெஸ்சியுடன் 5-5 என சமநிலை கண்டுள்ளார்.

நேற்று பாரிசில் நடந்த இந்த விருதளிப்பு விழாவில் மெஸ்சி 2ஆவது இடத்தைப் பிடித்த வேளையில், பிரான்சின் பிஎஸ்ஜி குழுவுக்கு விளையாடிவரும் பிரேசில் நெய்மார் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இந்த விருதினைப் பெற்றுக்கொண்டு பேசிய போது ஒவ்வொரு ஆண்டும்  இந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று ரொனால்டோ பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 

கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டில் மிகச் சிறந்த வெற்றிகளை ரொனால்டோ குவித்து இருக்கிறார். கடந்த ஆண்டில் ரியல் மாட்ரிட் குழு ,சாம்பியன் லீக் போட்டியில் வாகை சூடுவதற்கு ரொனால்டோ பெரிதும் உதவினார்.

மேலும் அக்குழு ஸ்பெயின் லீக் போட்டியில் சாம்பியனாக வாகை சூடியதற்கும் அவரது பங்களிப்பே காரணம். ரியல் மாட்ரிட் குழுவுக்காக ஒரே சீசனில் அவர் 42 கோல்களை அடித்து சாதனை புரிந்தார். 

2016-ஆம் ஆண்டில் தம்முடைய சொந்த நாடான போர்த்துக்கல் முதன் முறையாக ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு காரணமாக இருந்தவர் ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.   

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS