ரோஹித் புதிய சாதனை: ரசிகர்களைக் கண்கலங்க வைத்த மனைவி ரித்திகா!

உலக அரங்கம்
Typography

மொகாலி, டிசம்.14- இலங்கைக்கு எதிரான அனைத்துலக 'ஒன் டே'  கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நேற்று அபார வெற்றியை சுவைத்திருக்கிறது என்பது ஒருபுறமிருக்க, அதன் தொடக்க பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து இலங்கையை துவாம்சம் செய்ததோடு புதிய சாதனையையும் பதிவு செய்தார். 

மூன்று அனைத்துலக 'ஒன் டே' கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதங்கள் அடித்து சாதனைப் படைத்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றார் ரோஹித்.  

இந்த சாதனைக்காக அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. சமூக வலைத்தளங்களில் பாராட்டு மழைகள் பொழிகின்றன.

இதற்கு முன்பு 2013-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 203 ரன்கள் குவித்த ரோஹித், அதன் பிறகு 2014ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் குவித்தார்.

மூன்றாவது முறையாக நேற்று இலங்கைக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் இரட்டை சதங்களைக் கடந்து 208 ரன்கள் எடுத்து இறுதிவரை ரோஹித் ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடக்கது.    

இரட்டை சதத்ததை எட்டும் தருணத்தில், ஓரிரு முறை இலங்கை வீரர்களால் ரன் அவுட் செய்யப்படும் அபாயத்திற்கு ரோஹித் உள்ளான போது ரசிகர்கள் திகைத்து வாயடைத்துப் போயினர். 

அதேவேளையில் அரங்கில் இருந்த ரோஹித்தின் துணைவியார் ரித்திகா சாஜ்தே, அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார். எனினும் அந்த அபாயங்களில் இருந்து தப்பித்து இரட்டை சதங்களை எட்டி ரோஹித், புதிய சாதனைப் படைத்த போது ரித்திகா கண கலங்கிய காட்சி, தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புக்களை ரசித்துக் கொண்டிருந்த கோடிக்கணக்கான ரசிகர்களையும் கண்கலங்கச் செய்தது.      

BLOG COMMENTS POWERED BY DISQUS