நான்கு ஆஸ்கார் விருதுகளை வென்றது -The Shape of Water

உலக அரங்கம்
Typography

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச். 5-  உலக சினிமாவின் உச்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருது -2018  விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இந்த 90ஆவது ஆஸ்கார் விழாவில்  தி ஷேப் ஆப் வாட்டர் ( The Shape of Water) என்ற படம் 4 ஆஸ்கார் விருது களை வாகைசூடியது.

அதிகபட்சமாக, "தி ஷேப் ஆப் வாட்டர்" என்ற திரைப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு அடுத்தப் படியாக "டன்கிர்க்" திரைப்படம் 8 பிரிவுகளுக்கும், "திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசொளரி" என்கிற படம் 7 பிரிவுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டன. 

இதில், "தி ஷேப் ஆப் வாட்டர்" படம் அதிகபட்சமாக 4 விருதுகளைக் கைப்பற்க்ச் சாதனைப் படைத்தது. இது, கடல்வாழ் உயிரினங்களின் மீது தீராத காதல் கொண்ட ஒரு பெண்ணின் கதையை  மையமாக கொண்ட படமாகும். அடுத்து  "டன் கிரிக்" படம் 3 விருதுகளைக் கைப்பற்றியது.

ஆஸ்கர் விருதுகள் பற்றிய விபரம் வருமாறு:

## சிறந்த இயக்குநர் : குல்லர்மோ டெல் டோரோ (தி ஷேப் ஆப் வாட்டர்)

## சிறந்த நடிகர் : கேரி ஓல்டுமேன் (டார்க்கெஸ்ட் ஹவர்)

## சிறந்த நடிகை : பிரான்சஸ் மெக்டார்மேண்ட் 

    (த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசெளரி)

## சிறந்த படம் : தி ஷேப் ஆப் வாட்டர் 

## சிறந்த துணை நடிகர்:  சாம் ராக்வெல்

     (திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசெளரி)

## சிறந்த துணை நடிகை : ஆலிசன் ஜேனி (ஐ டான்யா)

## சிறந்த அனிமேஷன் படம் : கோகோ

## சிறந்த வெளிநாட்டு படம் - தி பென்டாஸ்டிக் உமன் : 

     சிறந்த இயக்குனர் செபாஸ்டியன் லீலியோ

## சிறந்த இசை : தி ஷேப் ஆப் வாட்டர் 

    -அலெக்சாண்ட்ரே டெஸ்ப்லெட்

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS