லிவர்புல்லின் வேட்டைக்கு பலியானது மென். சிட்டி

உலக அரங்கம்
Typography

லிவர்புல், ஏப்ரல் 5 –ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் முதல்கட்ட காலிறுதி ஆட்டத்தில் அதிரடி வேட்டையை நடத்தியது லிவர்புல் குழு. அந்த வேட்டைக்கு, பலம் பொருந்திய மென்செஸ்ட்டர் சிட்டிக் குழு பலியானது.

கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தனது சொந்த அரங்கத்தில் லிவர்புல் நினைவு கூரத்தக்க வகையிலான ஒரு  வெற்றியை நிலைநாட்டியது.க்கு எதிராக  ஆட்டம் தொடங்கிய 31 நிமிடங்களுக்கு உள்ளாகவே  லிவர்புல் 3 கோல்களை அடித்து   வீழ்த்தியது.

லிவர்புல் குழுவின் வெற்றிக் கோல்களை முன்னணி கோல் வீரர் முகம்மட் சாலாவும் அடுத்தடுத்து அலெக்ஸ் சேம்பர்லைன் மற்றும் சாடியோ மெனியும் மாறி மாறி இரு கோல்களைப் போட்டு மென்செஸ்ட்டர் சிட்டியை திக்கு முக்காட வைத்தனர்.

பிற்பகுதி ஆட்டத்தில் வீழ்ச்சியிலிருந்து மீட்சி பெற மென்செஸ்ட்டர் சிட்டி கடுமையாக போராடிய என்றாலும் அதன் முயற்சிக்கு பலன் கிட்டவே இல்லை, அடுத்து 2 ஆம் கட்ட காலிறுதி மோதல் செவ்வாயன்று நடக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS