×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 56

உங்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கும்போது உங்கள் உடல் அசைவு எப்படியிருக்கும் என கவனித்ததுண்டா

 

கண் கொட்டாமல், கை, கால் அசைவின்றி கிட்டத்தட்ட உறைந்த உடல்நிலையில் இருப்பீர்கள். உண்மைதான், நமக்கு விருப்பமான செயல்களில் ஈடுபடும்போது தன்னிச்சையற்ற இயக்கம் எதுவும் இன்றி ஆழ்ந்து கிடப்போம்.

 

ஆனால், சலித்துக்கொண்டு ஒரு வேலையைச் செய்யும்போது படபடவெனக் கண்சிமிட்டுதல், கால் ஆட்டுதல், அசவுகரியமான உடல் அசைவுகள் என தன்னிச்சையான உடல் அசைவுகள் அதிகம் இருக்கும்.

 

ஒருவரின் உடல் அசைவைப் பார்த்தே அவர் ஏனோதானோ என வேலை பார்க்கிறாரா? இல்லை உளப்பூர்வமான செய்கிறாரா? எனச் சரியாகக் கண்டு பிடித்துவிடலாம்எனச் சொல்கிறீர்களா? இப்போது இதைக் கண்டுபிடிக்கும் கணினி வந்துவிட்டது.

 

உடல்மொழியை உற்றுநோக்கி சலிப்பைக் கண்டறியும் கணினி புரோகிராமை லண்டன் சசெக்ஸ் பல்கலைக்கழக உடல்மொழி நிபுணரான டாக்டர் ஹாரி விட்சல் வடிவமைத்திருக்கிறார். இந்தக் கணினியின் செயல்பாட்டை நிரூபிக்கும் ஆய்வில் 27 பேர் கலந்துகொண்டனர்

 

சுவாரஸ்யமான கணினி விளையாட்டை விளையாடுதல், கடினமான பாடப் பகுதிகளைப் படித்தல் என விதவிதமான செயல்திறனில் ஒவ்வொருவரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

இதில் பங்குபெற்றவர்களின் அங்க அசைவுகளை வெறும் 3 நிமிடங்கள் மோஷன் டிராக்கிங் தொழில்நுட்பம் மூலம் துல்லியமாகக் கண்காணித்தது இந்தப் புதிய கணினி. சோதனையின் முடிவில் முழு ஈடுபாட்டுடன் இருப்பவர்களிடம் கண் சிமிட்டுதல், கை, கால் அசைத்தல் போன்ற தன்னிச்சையான உடல் அசைவுகள் 42 விழுக்காடு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

இத்தனை கூர்மையாக உடல் அசைவுகளை உற்று நோக்கும் இந்தக் கணினியானதுரோபோதொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் எனச் சொல்லப்படுகிறது. நுண்ணிய அசைவைக்கூட அச்சு அசலாகப் பதிவுசெய்யும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு செயற்கை அறிவுத் திறனைக்கூட (Artificial Intelligence) மேம்படுத்தலாம் என்றால் பாருங்களேன்.

 

உள்நாட்டுத் தொழில் துறைகளில் வேலை செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து ஆள் எடுக்கும் விவகாரத்தில் மலேசிய அரசாங்கம் திடீர் நெருக்கடிகளை எதிர் நோக்கியுள்ளது.

மூன்று ஆண்டுகால இடைவெளிக்குள் 15 லட்சம் வங்காள தேசத்தினர் வேலைக்கு ஆள் எடுக்கப்படுவார்கள் என்று மலேசியத் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஶ்ரீ அலகமட் ஸாஹிட் ஹமிடி ஓர் அறிவிப்பைச் செய்திருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களின் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர். ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்துமட்டும் இவ்வளவு எண்ணிக்கையில் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று தொழிற்சங்கங்களும் முதலாளிகள் சம்மேளனமும் அரசியல் கட்சிகளும் சமூக மற்றும் அரசு சாரா அமைப்புக்களும் ஒரு சேரக் கண்டனக் குரல் எழுப்பின.

தொழிலாளர்கள் விவகாரத்தில் எப்போதுமே எதிரும் புதிருமாக இருந்து வரும் மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரசும் முதலாளிகள் சம்மேளனமும் இந்த விஷயத்தில் ஒருமித்துக் கண்டனக் குரல் எழுப்பியது  அதிசயம் தான்.

மலேசியத் தொழில் துறையினருக்கும் நிறுவனங்களுக்கும் 15 லட்சம் வங்காளதேசத் தொழிலாளர்கள் இப்போதைக்குத் தேவையா?  

இது முறையாக ஆராயப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட முடிவா? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வியாக எழுந்தன

ஆனாலும், இது பற்றிக் கவலைப் படாமல், அவசர அவசரமாக 15 லட்சம் வங்காளதேசத் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அந்நாட்டுடன் மலேசியா கையெழுத்திட்டது.

 இதனால், உள்நாட்டுத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் மலேசியர்களிடயே ஏற்பட்டதில் நியாயம் இருக்கிறது.

குறைந்த சம்பளத்தில் எத்தகைய அடிப்படைச் சலுகைகளையும் கோராத தொழிலாளர்கள் வேலைக்குக் கிடைக்கும் போது, கூடுதல் சம்பளம், கூடுதலான அடிப்படை சலுகைகளைக் கொண்ட மலேசியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க உள்நாட்டு நிறுவனங்கள் முன்வராது என்பதே இந்த அச்சத்திற்குக் காரணம்.

மேலும் உள்நாட்டுக்காரர்கள், அழுக்குப் படிகிற, கடினமான வேலைகளைச் செய்ய முன் வருவதில்லை என்று துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி கூறியதானது, எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போலாகிவிட்டது. எதிர்ப்பும் நெருக்கடியும் அதிகமானதால், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான மறுதினமே மற்றொரு அறிவிப்பு வந்தது.

அதாவது, வங்காளதேசம் உள்பட வேறு எந்த நாட்டிலிருந்தும் புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பது ஒட்டுமொத்தமாக முடக்கிவைக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்த போது அது முன்னுக்குப் பின் முரணாதாக அமைந்தது.

இப்போது 20 லட்சம் வெளிநாட்டவர்கள் வரை மலேசியாவில் சட்டவிரோதமாக வேலைசெய்து வருகின்றனர் என சில தரப்புகள் கூறுகின்றன. இவர்களை முறையாகப் பதிவு செய்து, பர்மிட்டுகளை வழங்கி, தொழில்துறைகளின் தேவைக்கு ஏற்ப, வேலைக்கு அமர்த்துவதற்கான பதிவையும் மலேசிய அரசாங்கம் தொடங்க  ஏற்கெனவே முடிவு செய்திருக்கிறது.  

உணவகங்கள், மற்றும் தோட்ட விவசாயம் போன்ற துறைகளில் பணிபுரிவதற்கான பர்மிட்டுகளை மட்டுமே இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த மலேசியா, அண்மைய காலத்தில் அதனையும் முற்றாக நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்காள தேசத் தொழிலாளர்களால், முன்பு பல்வேறு சமூகப் பிரச்சனைகள் உருவாகி, மலேசியர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டதை அடுத்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது இன்னும் அந்நாட்டு மக்களின் மனதில் நிழலாடுவதால் தான் 15லட்சம் பேரை வேலைக்கு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியது

 

இப்போதுள்ள சூழலில் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்க்கும் விஷயத்தில் மலேசிய அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக இல்லை. வேலைக்கு வெளிநாட்டுக்காரர்களை எடுப்பதில் இன்னும் சில முரண்பாடான அறிவிப்புகள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

 

ஒருவருக்கு ஒருவர், தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி, பின்னாளில், இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது.  

 

உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. உலக அளவில், 100ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள், இன்று, 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. உலகில் உள்ள மொழிகளுக்குள், ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்., 21ஆம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

 

1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள், கோரிக்கை விடுத்தனர்.

கடந்த 1952ஆம் ஆண்டு பிப்., 21ஆம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி, டாக்கா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக, யுனெஸ்கோ அமைப்பு, 19கம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.

 

தாய்மொழி, தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி எனப் பொதுவாக மூன்று விதமான மொழிகள், ஒருவருக்கு தெரிந்திருந்தால், எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு துணையாக இருக்கும் என அறிஞர்கள் கூறுவர்.

 

ஆனால், தொடர்புகளுக்காக உருவான மொழியின் பெயரால், இனவாதம் துவங்கியது, துரதிஷ்டமானது. உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். எந்த மொழியையும் அழிக்கக் கூடாது.

"ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்' இத்தினம் வலியுறுத்துகிறது.

 

"தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது' என்பது, பொன்மொழி. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம். இனத்தின் அடையாளம் மொழி:

 

மொழியின் பிறப்பிடம் எது? தாயின் கருவறை. கருவறை இருளில் கண்கள் மூடியிருக்கும் கருக் குழந்தை, சும்மா இருப்பதில்லை. தாயுடன் பேசுபவர்களின் குரலை, சூழ்ந்து ஒலிக்கும் சத்தங்களை கேட்டுக் கொண்டேயிருக்கும்

 

மனிதனின் அடையாளம், அவனது தாய்மொழி தான். மொழியில் மூத்த, தமிழ்மொழியைப் பேசுவதே பெருமையான விஷயம். அதுவே, தாய்மொழியாய் நமக்கு அமைந்தது பெரும்பேறு. உச்சரிக்க இனிதான, நமது மொழியின் அருமை தெரியாமல், பிறமொழி மோகத்தில் தமிழை, தள்ளி வைத்து வேடிக்கை பார்க்கிறோம்.

 

 தாய் மொழி தமிழின் அருமையை, இனிமையை, மேன்மையை உளமார உணர இந்த நாள் உதவட்டும்.தாய் மொழியின் பெருமை பற்றி இவர்கள் என்ன கூறுகிறார்கள்?

 

அம்மா தான், மொழியை கற்றுத் தரும் முதல் ஆசிரியை. உறவை, உணவை, உணர்வை கற்றுத் தருவது அவள் தான். எத்தனை மொழிகள் படித்திருந்தாலும், காதலையும், வேதனையையும் தாய்மொழியில் தான் முழுமையாகச் சொல்ல முடியும்

 

உலகநாடுகளில் அனைவருமே, அவர்களது தாய்மொழியில் தான் பேசுகின்றனர். சொல் வங்கி உருவாவது, தாய்மொழியில் தான். வீட்டில் பெற்றோர், உறவினர்கள் தமிழில் குழந்தைகளிடம் பேசாவிட்டால், மொழியில் சங்கடம் தான் ஏற்படும். மொழி அழிந்தால், அந்த இனமே அழிந்து விடும்

 

தாய்மொழியில் சிந்திப்பவர்களே, உயர்வடைவர்

 

 

1945ஆம் ஆண்டு பிறந்த லெஸ் புரவ்ன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர். ஆசிரியர், அரசியல்வாதி, வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப் பாளர் என பன்முகம் கொண்டவர்

 

உணர்ச்சிகரமான அதேசமயம் வேடிக்கையான பேச்சால் புகழ்பெற்றவர். தங்கள் கனவுகளின் மூலம் எவ்வாறு வெற்றியை நோக்கி செயல்படுவது என்பதை தொடர்ந்து வலியுறுத்துபவர்

சிறிய நகைச்சுவைகள் மற்றும் வேடிக்கையான கதைகள் ஆகியவற்றை எப்போதும் தனது பேச்சில் பயன்படுத்துவார். தனது செயல்பாடுகளுக்காக தேசிய அளவில் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

 

மற்றவர்களுடனான தொடர்பிற்கான உங்களுடைய திறனானது, உங்களுடைய இலக்கிற்கான நோக்கத்தில் முக்கியமான கருவியாகும். அது குடும்பமோ, சக பணியாளர்களோ அல்லது வாடிக்கையாளர்களோ எதுவாயினும்.

 

மக்களில் வெற்றியடைந்தவர்கள் உள்ளனர், தோல்வியடைந்தவர்களும் உள்ளனர் மற்றும் எப்படி வெற்றிபெறுவது என்பதை இன்னும் கற்றுக் கொள்ளாதவர்களும் உள்ளனர்.

 

நீங்கள் மாறாதவரை உங்களால் புதிய இலக்குகளை அடைவதையோ அல்லது தற்போதைய சூழ்நிலையை விட்டு விலகிச் செல்வதையோ எதிர்பார்க்க முடியாது.

 

வாழ்க்கை உங்களை கீழே தள்ளும்போது மேல்நோக்கியவாறு விழ முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், மேல்நோக்கி பார்க்க முடியுமென்றால், உங்களால் எழவும் முடியும்.

 

நாம் அனைவரும் குறிப்பிட்ட அளவு சக்தியுடனே பிறந்துள்ளோம். இந்த உள்ளார்ந்த சக்தியைக் கண்டறிந்து, நம் வழியில் வரும் சவால்களை சமாளிக்க இவற்றை தினசரி உபயோகிப்பதே வெற்றிக்கு முக்கியம்.

 

சுற்றியுள்ளவர்கள் சுகமாக உணரும்படியான நேர்மறை தோற்றத்தை உங்களுடைய புன்னகை உங்களுக்கு கொடுக்கின்றது. நீங்களாக உருவாக்கிக் கொண்டதைத் தவிர வாழ்க்கைக்கென்று எந்த வரம்புகளும் இல்லை.

 

மற்றவர்களுடைய கனவுகளை அடைய அவர்களுக்கு உதவி செய்யுங்கள்; நீங்கள் உங்கள் கனவுகளை அடைய முடியும்.

 

நீங்கள் உங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டால், உங்கள் கனவுகளை சாதிப்பதற்கான ஆவலை உருவாக்க வேண்டும். யார் உங்கள் மனதை புண்படுத்தி உள்ளார்களோ, அவர்களை மன்னித்து விடுங்கள்.