ஜப்பான் சின்மோடேக் எரிமலை வெடிக்கும் அபாயம்!

World
Typography

 

தோக்கியோ, அக்.12- ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் புகைய தொடங்கி ஜப்பானின் கியூஷூ தீவில் உள்ள சின்மோடேக் என்ற எரிமலை  இப்போது எந்த நேரத்திலும் வெடிக்கத் தாயாராகி விட்டது.

கியூஷூ தீவில் கிரிஷிமா எரிமலைக் கூட்டத்தில் ‘சின்மோடேக்’ எரிமலை அமைந்துள்ளது. இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு உருவானதாக நம்பப்படுகிறது. 1716, 1717, 1771, 1822, 1959, 1991, 2008, 2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்ததாக பதிவாகியுள்ளன.

இந்த எரிமலை கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதியன்று  புகையத் தொடங்கியது. பிப்ரவரி முதல் தேதியன்று மிகப்பெரிய வெடிப்பொன்றில் நெருப்புக் குழம்பு, கற்கள் மற்றும் சாம்பலை வானில் பீய்ச்சியடித்தது.

இதன் தாக்கம் 8 கி.மீ வரையிலும் சன்னல்களை உடைக்கும் அளவு இருந்தது. இந்நிலையில், இந்த எரிமலை நேற்று மீண்டும் புகைய தொடங்கியுள்ளது. இந்த புகையும், சாம்பலும் வானில் சுமார் 300 மீட்டர் வரை பரவியதாக கூறப்படுகிறது. 

மேலும் வெடிப்பு ஏற்படும் பொழுது கட்டிடங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல கூடாது என ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS