சாந்தா பார்பரா, ஜன.9- கடந்த மாதம் முழுவதும் கடுமையான காட்டுத் தீயினால் பலத்த சேதத்திற்கு உள்ளான தென் கலிபோர்னியாவில் நிகழ்ந்த திடிர் மழை மற்றும் மண் சரிவில் புதையுண்டு 13 பேர் மேண்டனர். மேலும் 130 பேர் கயமடைந்தனர்.
ரோமேரோ கென்யோன் பகுதியில் கடும் மழையைத் தொடர்ந்து சகதியுடன் மிகப்பெரிய அளவில் மண்சரிவுகள் ஏற்பட்டன. கிட்டத்தட்ட இடுப்பளவுக்கு அப்பகுதியை மூடிவிட்ட சகதிக்குள் சிக்கி சிலர் மாண்டனர் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் சிலர் சகதிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு தவித்த நிலையில் மீட்புப் படைப் பிரிவினரால் மீட்கப்பட்டனர்.
கடும் மண்சரிவின் காரணமாக இப்பகுதி பார்ப்பதற்கு போர் நடந்த பூமியைப் போல காட்சி தருவதாக ஊடகங்கள் வர்ணித்தன. கடலோர சாலைப் பகுதியில் கிடடத்தட்ட 30 கிலோ மீட்டர் அளவுக்கு முற்றாக தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப்படைப் பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். சகதிகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்பதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அருகிலிருந்த குன்றுப்பகுதிகளில் இருந்து கார்களின் அளவுக்கு பெரிதாக குண்டுக் கல்கள் உருண்டு வந்து சாலைகளை மூடியதோடு தொடர்ந்து மண்சகதிகளும் குபுகுபுவெனக் கீழே இறங்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். இந்தச் சகதியில் சில வீடுகள் முற்றாக புதையுண்டன.
தென் கலிபோர்னியா: இடுப்பளவு சகதிக்குள் சிக்கி 13 பேர் புதைந்த சோகம்!
Typography
- Font Size
- Default
- Reading Mode