மாற்றங்களைத் தெறிக்கவிட தயாராகி விட்டது முகநூல்!

World
Typography

சான்பிரான்சிஸ்கோ, ஜன.12- வர்த்தகம், பொருள்கள்  விளம்பரங்கள் மற்றும் செய்தி ஊடகத் தலையீடுகள் ஆகியவற்றைக் குறைத்து குடும்பங்க ளுக்கு இடையிலான தொடர்பாடல்களை தெறிக்கவிடும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் மாற்றங்களைச் செய்ய முகநூல் எனப்படும் பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வர்த்தக ரீதியிலான அம்சங்கள் முகநூலில் ஊடுருவிக் கொண்டே இருப்பதால் முகநூல் பதிவுகள் அதன் பிரபலத்தை இழந்து வருவதாக கூறப்பட்டது. குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு பயன்படுவதற்கு முக்கியத்துவம் தரும் வகையில் மாற்றங்களைக் கொண்டுவர அதன் தலைமை செயல்நிலை தலைமை அதிகாரி மார்க் ஷுக்கர்பெர்க் குறிபிட்டார்.

மக்களின் தனிப்பட்ட தொடர்பாடலைப் பெருக்குவதன் மூலம் ஒருவருக்கொருவர் கலந்து பேசுவதை வர்த்தகம் சார்ந்த பதிவுகளும் பொருள் சார்ந்த பதிவுகளும் மிஞ்சி விட்டதாக அவர் சொன்னார். 

மக்களின் நலனுக்காகத்தான் முகநூல் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவேண்டிய கடப்பாடு தமக்கும் தம்முடைய குழுவினருக்கும் இருப்பதாக  ஷுக்கர்பெர்க் சொன்னார்.

ஒருவேளை இவ்வாறு செய்வதால், முகநூலில் மக்கள் தங்களின் நேரத்தைச் செலவிடுவது குறையக் கூடும். ஆனால், அவ்வாறு அவர்கள் செலவிடும் குறைவான நேரமும் தரமான, மதிப்புமிக்க நேரமாக இருக்கும் என்றார் அவர்.

துஷ்பிரயோகம் செய்யப்படுவதிலிருந்து முகநூல் பயனாளிகள் பாதுகாக்கப்படும் அதேவேளையில், அவர்கள் அங்கே செலவிடும் நேரமும் மதிப்புமிக்கதாக இருக்க வேண்டும் என்று கருதுவதால் அடுத்த சில வாரங்களுக்குள் சில மாற்றங்களை முகநூல் அமலாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS