அதிபர் டிரம்பின் அசிங்கமான பேச்சு! ஆப்பிரிக்க நாடுகள் ஆவேசம்!

World
Typography

லண்டன், ஜன13- ஆப்பிரிக்க நாடுகளை மிக அசிங்கமாக வர்ணித்துக் கேவலப்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆப்பிரிக்க நாடுகளின் அமைப்பு கோரிக்கை விடுத்தது. 

நேற்று முன்தினம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடனான சந்திப்புக் கூட்டத்தில், அமெரிக்காவில் குடியேறுவோர் தொடர்பான குடிநுழைவு விதிமுறைகள் குறித்த கலந்துரையாடலின் போது ஆப்பிரிக்க நாடுகள் குறித்து அதிபர் டிரம்ப் அசிங்கமாக பேசியதாக வெளியான தகவலால் பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த  குடியேறிகளை நாம் அனுமதிக்கவேண்டும். நார்வே போன்ற நாடுகளில் இருந்து வருவோரை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால்,ஆப்பிரிக்காவின் 'மலக் குழி' நாடுகளில் இருந்து வருவோரை எதற்காக நாம் நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று டிரம்ப் பேசியுள்ளார்.

இந்தத் தகவல் வெளியாகி அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், 55 ஆப்பிரிக்க நாடுகளைப் பிரதிநிதிக்கும் அகில ஆப்பிரிக்க நிறுவனம் டிரம்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

அதிபரின் பேச்சு, எங்களுக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் அசிங்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மாறுபாட்டையும் மானுட மாண்புகளையும்  மதித்துப் போற்றிய மேன்மைமிகு அமெரிக்கர்களை அவமதிப்புச் செய்யும் வகையில் டிரம்ப்பின் பேச்சு அமைந்துள்ளது.

இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும் ஆப்பிரிக்காவிலிருந்து ஏன்  சிலர் அமெரிக்காவுக்கு குடியேறிகளாக வருகிறார்கள் என்பது மீதான காரணங்களையும் அதிபர் டிரம்ப் புரிந்து கொள்ளவேண்டும் என்று அது வலியுறுத்தியது. 

இதனிடையே அந்த தனிப்பட்ட சந்திப்புக்கு கூட்டத்தில், 'மலக் குழி' என்ற  வார்த்தையை நான் பயன்படுத்தவே இல்லை என்று டிரம் குறிப்பிட்டிருக்கும் வேளையில், அந்தக் கூட்டத்தில் அந்த வாரத்தையை அவர் பல முறை பயன்படுத்தினார் என அதில் கலந்து கொண்ட ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS