பொது அரங்கில், கால்பந்து ஆட்டத்தை காண சவுதி பெண்களுக்கு அனுமதி!

World
Typography

ஜெட்டா, ஜன.13- பழமைவாத நம்பிக்கை கொண்ட நாடான சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் கால்பந்து விளையாட்டை அரங்குகளுக்குச் சென்று காண அனுமதிக்கப்பட்டது.  ஜெட்டா அரங்கத்தில் நேற்று நடந்த கால்பந்து விளையாட்டைக் காண  பெண்கள் பலர் வந்திருந்தனர்.

அரங்கத்தின் ஒரு பகுதியில் குடும்பங்களுக்கான நுழைவாயில் என்ற பகுதி உருவாக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக பெண்கள் தங்கள் குடும்பத்தின ருடன் முதன் முறையாக  பந்து விளையாட்டை ரசித்தனர்.

அண்மையில், சவுதி அரேபியா பல சமூக சீர்த்தங்களை அமல் படுத்தி வருகிறது. பெண்கள் காரோட்டுவதற்கு அண்மையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. மேலும் பெண்கள், கார் வாங்குவதற்கான தனிக் காட்சியகம் ஒன்று அண்மையில் திறக்கப்பட்டது.

இப்போது  அரங்கத்தில் தனியாக ஒதுக்கப்பட்டுள்ள  பகுதியில் இருந்து கால்பந்து  விளையாட்டை ரசிக்க பெண்களுக்கு இப்போது அளிக்கப்பட்டிருக்கும் இந்த உரிமை, குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS