10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரிட்டிஷ்காரர்கள்  கறுப்பினத்தவரா?

World
Typography

லண்டன், பிப்.9- பிரிட்டனில் முதன் முதலில் வாழ்ந்த பிரிட்டிஷ்காரர்கள் வெள்ளையர்கள் அல்ல, கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் என்று இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

பிரிட்டன் நாட்டில் வாழ்ந்த மிகப் பழமையான மனிதனின் எலும்புக் கூடு ஒன்று, கடந்த 1903-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. அந்த எலும்புக் கூட்டின், காதுகளில் கிடைக்கப்பெற்ற மரபணுவைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் வாயிலாக, அந்த எலும்புக் கூட்டிற்கு சொந்தமானவரின் தோல்கள் வெள்ளையர்கள் போன்றல்லாமல், சற்று கறுத்த மேனியைக் கொண்டவருடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, அந்த எலும்புக் கூட்டுக்கு உரியவரின் தலைமுடி சுருண்டும், அவரின் கண்கள், இள நீல வண்ணத்திலும் அமைந்துள்ளன என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். 

செடார் மென் 'Cheddar Man' என்றழைக்கப்படும் அந்த எலும்புக் கூட்டுக்கு உரியவர், பிரிட்டனுள் நுழைந்த வேட்டைக்காரர்கள் வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

தற்போதைய காலத்தில் ஐரோப்பியர்கள் வெண்மை நிற மேனியைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிறம், தற்போதைய இயற்கை சூழலினால், அவ்வாறு மாறியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS