ஆண்கள் குளிப்பதைப் படம் எடுத்த பயிற்சி ஆசிரியர்; 4 வார சிறை!

World
Typography

சிங்கப்பூர், பிப்.10- ஆண்கள் குளியலறையில் குளிப்பதையும் சிற்றின்பம் அனுபவிப்பதையும் தனது கைப்பேசியில் படமெடுத்த பயிற்சி ஆசிரியருக்கு இங்குள்ள நீதிமன்றம் நான்கு வார சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. 

தேசிய கல்வி கழகத்தில் இறுதி ஆண்டு பயின்று வரும் மாணவர் மித்செல் லோ தியன் வெய் (வயது 25), அங்குள்ள கழிவறையில் ஆண் மாணவர்கள் குளிப்பதையில் அவர்கள் சிற்றின்பம் அனுபவிப்பதையும் மறைந்திருந்து தனது கைப்பேசி வழி படம் பிடித்துள்ளார்.

கடந்தாண்டு அக்டோபர் 13ஆம் தேதி 22 வயது ஆடவர் ஒருவர் தான் குளித்துக் கொண்டிருந்தபோது மேலே பச்சை நிற கைப்பேசி ஒன்று தன்னை படம் பிடித்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பலமாக சத்தம் போடவும் மித்செல் உடனடியாக எடுத்த படங்களை அழித்தார் என துணை அரசு தரப்பு வழக்கறிஞர் நிக்கோலாஸ் கூறினார்.

சம்பவத்தை அடுத்து மித்செல் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு இங்குள்ள நீதிமன்றம் நான்கு வார சிறைத் தண்டனை வழங்கியது.

BLOG COMMENTS POWERED BY DISQUS