விபத்தில் தங்கை: உதவாமல்,  உயிரிழப்பதை நேரலை செய்த  அக்காளுக்கு 6 ஆண்டு சிறை!

World
Typography

 லாஸ் ஏஞ்சலிஸ், பிப்.10- அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தன்னுடைய சகோதரிக்கு உதவி செய்யாமல் அந்தக் காட்சியை நேரலை செய்த இளம்பெண்ணுக்கு நீதிமன்றத்தில் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் கலிபோர்னியாவிலுள்ள லாஸ் பனோஸ் என்ற இடத்தில் 14 வயதுடைய ஜேக்குலின் சன்செஸ் என்பவர் வாகன விபத்தின் போது தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.  

அப்போது அருகில் நின்று படுகாயத்துடன் அசைவற்றுக் கிடந்த ஜேக்குலினுக்கு உதவாமல் அந்தக் காட்சியை நேரலை செய்துள்ளார் அவருடைய சகோதரியான 19 வயதுடைய ஓப்டுலியா சன்செஸ்.

மேலும் விபத்துக்குள்ளான அந்தக் காரை ஓட்டியவர் ஓப்டுலியா தான். தனது சகோதரியைக் கொலை செய்யும் நோக்கத்தில் இவர் வாகனத்தை செலுத்தியிருக்கக்கூடும் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டது.

அதோடு, 'எது நேரவேண்டும் என்று நினைத்தானோ, அது நேர்ந்து விட்டது' என்றும் அந்த நேரலையில் அவர் பதிவு செய்திருந்தது இந்த சந்தேகத்தை வலுப்படுத்தி யது. அவர் காயமடைந்து கிடந்த தருணத்தில் அவர் ஒருமுறை கூட யாருடனும் தொடர்பு கொண்டு எந்த உதவியும் கோரவில்லை என்று போலீசார் கண்டறிந்தனர்.

இந்நிலையில் இவரைக் கைது செய்த போலீசார், இவருக்கு எதிராக கொலை வழக்கு விசாரணையை நடத்தினர். இவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதைத் தொடர்ந்து  6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS