ரஷ்யா விமான விபத்து; பனிப்பிரதேசத்தில் 71 பேர் பலி

World
Typography
 மாஸ்கோ, பிப் 12- ரஷ்யத் தலைநகரான மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பனிப் பிரதேசப் பள்ளத்தாக்கு ஒன்றில் விபத்துக்குள்ளா னதில் உள்நாட்டு பயணிகள் விமானத்தில் இருந்த 71 பேர் சம்பவம் நடந்த இடத்திலேயே மாண்டனர்.
 
 
ரஷ்யாவின் சராட்டோவ் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம், மாஸ்கோவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 65 பயணிகள் 6 பணியாளர்கள் இருந்தனர். விமான நிலையத்தை விட்டுப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்து விட்டது.
 
மிகவும் பனி அடர்ந்து பிரதேசமான ராமெங்ஸ்கோயே என்ற இடத்தில் அந்த விமானம் விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து ரஷ்யா முழு அளவில் விசாரணையை தொடங்கியுள்ளது. பனி மூட்டம் காரணமாக விபத்து நடந்திருக்கும் சாத்தியம் இருப்பதாக கருதப்படுகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS