உலகிலேயே சிறந்த அமைச்சர் - ஶ்ரீமுல்யானி இந்திராவதிக்கு விருது!

World
Typography

துபாய் பிப்.13- இந்தோனேசியாவின் நிதியமைச்சர் ஶ்ரீ முல்யானி இந்திராவதிக்கு உலகிலேயே சிறந்த அமைச்சர் என்ற விருது வழங்கப்பட்டது. 

ஐக்கிய அரபுச் சிற்றரசின் துபாய் நகரில் நேற்று முன்தினம்  6ஆவது அனைத்துலக அரசுகள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்தர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், ஐக்கிய அரபு சிற்றரசின்  துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், இந்தோனேசிய நிதியமைச்சர் ஶ்ரீ முல்யானி இந்திராவதிக்கு உலகின் சிறந்த அமைச்சர் விருதை வழங்கினார்.

ஊழலுக்கு எதிராக போராடியதுடன் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதற்காக முக்கிய பங்கு வகித்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக மாநாட்டு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

கடந்த 2016-இல் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்ற இந்திராவதி, இந்தோனேசிய பொருளாதாரம் வலுவடைய முக்கிய காரணமாக இருந்தள்ளார். இவரது முயற்சியால் முதலீடுகள் அதிகரித்துள்ளன. 

இவர் இதற்கு முன்பு உலக வங்கியின் நிர்வாக இயக்குநராகவும்,  பதவி வகித்துள்ளார். மேலும் 'போர்ப்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 38-ஆவது இடத்தைப்  பிடித்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS