இலங்கை அரசியலில் கடும்நெருக்கடி: அதிபரைக் கவிழ்க்க பிரதமர் திட்டம்? 

World
Typography

கொழும்பு பிப்.14-  அண்மையில் இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திர கட்சி கூட்டணி படுதோல்வி அடைந்த நிலையில் இலங்கை அரசியலில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

அதிபர் மைத்ரி சிறிசேனா ஆட்சியைக் கவிழ்த்த பின்னர் தனித்து ஆட்சி அமைக்க பிரதமர் ரணில் திட்டமிடுவதாக தெரிகிறது. 

இலங்கையில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் சிறிலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து கூட்டு அரசாங்கத்தை நடத்தி வருகின்றன. தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்சேவின் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியைப் பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சி 2-ஆவது இடத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3ஆவது இடத்தையும் பெற்றது. சிறிசேனவின் சிறிலங்கா சுதந்திர கட்சி படுதோல்வியை சந்தித்தது.  

ஆளும் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததால் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

எனினும், பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே வரும் இரண்டரை ஆண்டுகளுக்கு தனித்து ஆட்சி அமைப்பதற்கான சாத்தியங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மைத்ரிபால சிறிசேனாவுடன் ரணில் ஆலோசனை நடத்திய போது கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதனால் ரணிலுக்கும் மைத்ரி சிறிசேனாவுக்கும் இடையே மோதல் வலுத்து வருவதால் அரசியல் குழப்பம் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பின் அரசியல் சூழல் குறித்து  இந்திய அரசும் அமெரிக்க அரசும் கூர்ந்து கவனித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS