நேப்பாளத்தில் வங்கதேச விமானம் விழுந்து நொறுங்கியது; 50 பேர் மரணம்!

World
Typography

காட்மண்டு, மார்ச் 12 – கிட்டதட்ட 67 பயணிகளுடன் நேப்பாளத் தலைநகரை காட்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த வங்காளதேச பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த பயணிகளில்  கிட்டத்தட்ட 50 பேர் மாண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இவர்களில் 31 பேர் சம்பவம் நடந்த இடத்திலேயே மாண்டதாகவும் எஞ்சியவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிர்நீத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

தரையிறங்கும் நேரத்தில் அதன் ஸ்திரத் தன்மை பாதிக்கப்பட்டதால் இந்த விபத்து நடந்தது. கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தின் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடிய வேளையில், பயணிகளில் சிலரை மட்டுமே மீட்க முடிந்ததாக தொடக்கத் தகவல்கள் கூறுகின்றன.

விமான நிலையத்தின் கிழக்கே ஒரு கால்பந்து திடலில் இந்த விமானம் விபத்துக்குள்ளானது. 67 பயணிகள் 4 பணியாளர்கள் இந்த விமானத்தில் இருந்தனர்.  பல பயணிகளின் உடல் கருகிய நிலையில் சிதைந்த விமானத்தினுள் இருந்து   மீட்கப்பட்டது.

   

BLOG COMMENTS POWERED BY DISQUS