வீட்டில் பூமிக்கடியில் பாட்டில்களில் பதப்படுத்தப்பட்ட குழந்தைகள்!

World
Typography

தோக்கியோ,  மார்ச். 21 – ஜப்பான் தலைநகரான தோக்கியோவில் சீரமைக்கப்பட்டுக் கொண்டிருந்த வீட்டினுள் பூமிக்கடியில்  பாட்டில்களில் பதப்படுத்தப்பட்டிருந்த 4 கைக் குழந்தைகளின் சடலங்களைக் கரையானை அழிக்கும் நிறுவனம் ஒன்று கண்டு பிடித்துள்ளது. அவற்றில் ஒரு சில குழந்தைகளின் சடலம் தொப்புள் கொடியுடன் காணப்பட்டன. 

இதற்கு முன்பதாக மகப்பேறு மருத்துவர் ஒருவர் வாழ்ந்ததாக கூறப்படும் அந்த வீடு, சுமார் 3 வருடங்களாக, கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. அதன் பின்னர் அந்த வீட்டை வாங்கிய ஒருவர், கரையானை அழிக்கும் நிறுவனம் ஒன்றிடம்  அந்த புதிய வீட்டில் இருக்கும் கரையான்களை அழிக்குமாறு பணித்தார். 

அந்த நிறுவனத்தின் பணியாளர்களும் வேலையில் ஈடுபட்டிருந்த போது அவர்களுக்கு இந்த கைக்குழந்தைகள் பதப்படுத்தப்பட்டிருந்த பாட்டில்கள் சிக்கின. 

உடனே போலிசுக்கு தகவல் கொடுத்தனர். “ஃபார்மலின்” வகை திரவியங்கள் கொண்டு இந்த குழந்தைகளின் சடலங்கள் பதப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS