காட்டுப் பன்றிகளிடமிருந்து விவசாயத்தை பாதுகாக்க ‘ரோபோ' ஓநாய்கள்!

World
Typography

தோக்கியோ,, மார்ச்.13-  விவசாய நிலங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு 'ரோபோ' (இயந்திர) ஓநாய், தனது சோதனையில் வெற்றி பெற்றதையடுத்து அடுத்த மாதம் அதிகமான அளவில் ஓநாய் 'தயாரிப்பு' வேலைகள் தொடங்கவுள்ளன.

சுமார் 65 சென்டிமீட்டர் நீளமும், 50 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட இந்த ரோபோ ஓநாய், உண்மையான விலங்கினை போல முடியையும், செந்நிறக் கண்களையும் கொண்டுள்ளது.

காட்டுப் பன்றிகளிடம் இருந்து நெல் மற்றும் இதரப் பயிர்களைக் காப்பாற்ற இந்த ஓநாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் முதல் கிழக்கு ஜப்பானிலுள்ள கிசாருசு நகரத்தின்  வயல்களில் இது பயன்படுத்தப்பட்டது.

காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட இதர விலங்குகள் இந்த ரோபோ ஓநாயிடம் நெருங்கி வந்தால், இதன் கண்கள் மிளிருதுவடன், ஊளையிடவும் தொடங்கும். சூரிய சக்தியில் பேட்டரிகள் மூலம் இது செயல்படும்.

இந்த ரோபோ ஓநாய் இருக்கும் பகுதிகளில், பயிர் சேதப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து விட்டது என ஜப்பான் விவசாய கூட்டுறவு நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு முன்பு கிசாருசு நகரத்தில் விவசாயிகள் ஒவ்வோர் ஆண்டு விளையும் பயிர்களில் ஒரு பகுதியை காட்டுப் பன்றியிடம் இழந்து வந்தனர்.

ஒரு மின் வேலிகளை விட  மிகவும் பயனுள்ளதாக இருக்கும்  இந்த ரோபோ ஓநாய்கள், இனி அதிக அளவில் வடிவமைக்கப் படவுள்ளன. 

BLOG COMMENTS POWERED BY DISQUS