பேஸ்புக் தடையை நீக்க இலங்கை நிபந்தனை!

World
Typography

கொழும்பு, மார்ச்.13-  பேஸ்புக் மீதான தடையை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நிபந்தனைகளை விதித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள்காட்டி,  இலங்கை ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டிருக்கின்றன.

பேஸ்புக் மீதான தடை அரசியல் சார்ந்த விஷயம்  அல்ல. இனவாதத்தை தூண்டும் மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையான பதிவுகளை தொடர்ந்து இடம்பெற அனுமதிக்க முடியாது. 

இந்த விவகாரத்தில்  பேஸ்புக் நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. அந்த நிறுவனம் வழங்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த தடையை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை  குறிப்பிட்டுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS