சவூதியில் இலங்கைப் பெண் சுட்டுக் கொலை! சுட்டவரும் தற்கொலை!

World
Typography

புரைடா, மார்ச்.13- சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார். பின்னர் இந்தக் கொலையைச் செய்தவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சவூதியின் புரைடா  பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடைபெற்றது. சவூதி பிரஜை ஒருவர் அந்த இலங்கை பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார், பின்னர் அவரும்  தற்கொலை புரிந்து கொண்டதாக ஊடகத் தகவலகள் கூறுகின்றன. 

பிரியங்கா ஜெயசங்கர் என்ற 42 வயதுடைய அந்தப்  பெண் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 30 வயதுடைய அந்த சவூதி பிரஜையின்    இல்லத்தில்  இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

கொல்லப்பட்ட பெண்ணின் சடலம் அல் ராஸ்  மருத்துவமனை க்கு அனுப்பட்டது.   துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சவூதி பிரஜை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக   ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS