இனப் படுகொலைக்கு  நீதியெங்கே? ஜெனிவாவில் தமிழர்கள் போராட்டம்!

World
Typography

ஜெனிவா, மார்ச்.13- ஈழத்தில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புச் செயல்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று கோரி மாபெரும் போராட்டம் ஒன்றை தமிழர்கள் ஜெனிவாவில் முன்னெடுத்தனர்.

இந்த நீதி கோரும் மாபெரும் போராட்டம் ஜெனிவா  ரயில்  நிலையத்திற்கு அருகிலிலுள்ள பூங்காவில்  பிற்பகல் தொடங்கியது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டமானது ஜெனிவா முருகதாசன் திடலை அடைந்து, அங்கு முக்கிய பிரமுகர்களின் உரைகள் இடம் பெற்றன.

பல ஆண்டுகளாக  இலங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும். அனைத்துலக நீதி மன்றத்தில் விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

 

BLOG COMMENTS POWERED BY DISQUS