வெளியுறவு அமைச்சரின் சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்பினார் டிரம்ப்!

World
Typography

வாஷிங்டன், மார்ச. 14-  தம்மோடு பல்வேறு அம்சங்களி ல் கருத்து முரண்பாடு கொண்டிருந்த வெளியுறவு அமைச்சர்  ரெக்ஸ் டில்லர்சனின் சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

கடந்த ஆண்டு  வெளியுறவு அமைச்சர் பொறுப்பில் டில்லர்சனை அமர்த்தினார் டிரம்ப். எனினும், வெளிப்படையாக கருத்து முரண்பாடுகளை டில்லர்சன் கொண்டிருந்ததால் திடுதிப்பென அவர் நீக்கப்பட்டார்.  அவருடைய பதவி நீக்கத்தை தமது டிவிட்டரில் டிரம்ப் அறிவித்தார்.

தம்முடைய பதவி நீக்கம் பற்றிக் கருத்துரைத்த டில்லர்சன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் டிரம்ப்பிற்கு மறந்தும் நன்றி சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சீனாவுடனான அமெரிக்க உறவைச் சீர்படுத்துவதிலும் வட கொரியாவுடனான வம்புகளைத் தணிப்பதிலும் தான் பெரும்பங்காற்றி இருப்பதாக குறிப்பிட்ட டில்லர்சன்,  ரஷ்ய அரசாங்கத்தின் குரோதச் செயல்களைத் தடுப்பதிலும் தாம் சிறந்த பணிகளைச் செய்திருப்பதாகச் சொன்னார்.

டில்லர்சனுக்கு பதிலாக புதிய வெளியுறவு அமைச்சராக, நடப்பு சிஐஏ உளவுத்துறையின் இயக்குனரான மைக் பொம்பியோ நியமிக்கப்பட்டார். 

மேலும், பொம்பியோவுக்குப் பதிலாக புதிய  சிஐஏ இயக்குனராக  கினா ஹெஸ்பல் நியமிக்கப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் சிஐஏ-யின் இயக்குனராக பெண்மணி ஒருவர் நியமிக்கப் பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.

பதவி நீக்கம் செய்தது குறித்துக் கருத்துக் கூறிய டிரம்ப், "எனக்கும் டில்லர்சனுக்கும் பொதுவான விஷயங்களில் இணக்கம் நிலவினாலும் சில முக்கிய விஷயங்களில் எங்களின் 'கெமிஸ்ட்ரி'  சரியாக இல்லை" என்று சொன்னார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS