மரணம் வருவதை 23 மணி நேரத்திற்கு முன்பே கண்டு கொள்ளலாம்!- ஆய்வு

World
Typography

லண்டன், ஏப் 16- மரணத்திற்கு முன்னர் சில அறிகுறிகளை வெளிப்படுத்துவதில் இருந்தே அவர்களின் ஆயுட்காலம் அடுத்த 23 மணி நேரத்தில் முடிவடையும் என்பதை புரிந்து கொள்ளலாம் என்ற திடுக்கிடும் தகவலை மருத்துவர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

மரணமடைவதற்கு முன்னதாக பொதுவாக குறிப்பிட்ட நபருக்கு விழுங்கவோ,  இருமவோ முடியாமல் போகும். இதனால் அவர்களது சுவாசக்குழாயை  இயற்கையாகவே சுத்தம் செய்யும் பணி முடங்கும்.

மரணத்தின் 23 மணி நேரத்திற்கு முன்னர் ஒருவருக்கு என்ன நிகழும் என்பதை பிரிட்டனிலுள்ள பிரபல மருத்துவர் டேனியல் முரேல் முதன் முறையாக பட்டியலிட்டுள்ளார். 

சுவாசக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அவர்களால் இயற்கையாகவே சுவாசிக்க முடியாமல் போகிறது. இதனால் வேறுபட்ட சத்தம் ஒன்றை அவர்கள் எழுப்புவதாக மருத்துவர்  டேனியல் தெரிவித்துள்ளார்,

முக்கியமாக தொண்டைக் குழியில் இருந்து சுரக்கும் ஒரு வகை திரவத்தை அவர்களால் அப்புறப்படுத்த முடியாமல் போகும் நிலையிலேயே மரணம் ஏற்படுவதாக அவர் கூறுகின்றார்.

மரணத்திற்கு முன் குழப்பம், சுய நினைவு இழத்தல், உடல் வாசத்தில் மாற்றம், சிராய்ப்புண், எதிர்ப்பு தெரிவித்தல், அடிக்கடி கொட்டாவி விடுதல், அடங்க மறுப்பது, அடைப்பு ஏற்படுட்டது போன்ற சத்தம், தோலில்  பல வண்ண புள்ளிகள் இது போன்ற காரணங்கள் முன் நிறுத்துகிறார் டேனியல்.

BLOG COMMENTS POWERED BY DISQUS