துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்;  பெருமிதப்பட்டுக் கொள்கிறார் டிரம்ப்

World
Typography

 நியூயார்க். ஏப்ரல்.16- சிரியாவில் மூன்று நாடுகள் நடத்திய கூட்டுத் தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்  பெருமிதப்பட்டுக் கொண்டார். சிரியாவின் டூமா நகரில் கடந்த வாரம் அரசுப் படைகள் நடத்திய இரசாயனத் தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் கூட்டுப்படையினர்  சிரியாவில் அரசுக்கு சொந்தமான மூன்று இடங்களில் வான்வழி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர்.அவை   இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்படும் இடம் மற்றும் இருப்பு வைக்கப்படும் இடங்கள் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், அமெரிக்கா அதிபர் டிரம்ப், தம்முடைய டுவிட்டர் பக்கத்தில், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அறிவுக்கும் படை வலிமைக்கும் நன்றி. இதை விட சிறப்பாக செய்திருக்க முடியாது.  எங்களின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அமெரிக்கக் கூட்டுப்படைகளின் இந்தத் தாக்குதலை ரஷ்ய அதிபர் புடின் கடுமையாக கண்டித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அந்த நாட்டில் உள்ள தமது படையினர் தாக்கப்பட்டால் ராணுவ ரீதியாக பதிலடி தரப்படும் என்று எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS