இந்தோனேசியாவில்  நிலநடுக்கம் பீதியில் மக்கள்  ஓட்டம்!

World
Typography

ஜகார்த்தா, ஏப். 16-  இன்று அதிகாலை  இந்தோனிசியாவின் மொலுகாஸ் பகுதியில்  5.9 ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 36 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டது.

இந்தோனேசியா  பல்வேறு தீவுகளைக் கொண்ட ஒரு  நாடு. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும்  நெருப்பு வளைய பகுதியில் அமைந்து        உள்ளது. இதனால் அடிக்கடி நிலநடுக்கம்  ஏற்பட்டு வருகிறது.

இந்த திடீர் நிலநடுக்கத்தில் அப்பகுதியில் இருந்த வீடுகளும் கட்டடங்களும் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடினர். இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு உயிருடற்சேதங்கள் நிகழ்வதால் மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலநடுக்கப் பீதி நீடித்து வருகிறது.

இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும்  இதுவரை வெளியாகவில்லை. ஆனால், நில நடுக்கத்தால் சிறிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணைய தளத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS