பூமியில் சாதாரணமாக ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்கு விமானத்தில் பயணிக்கும் நாம், இன்னும் சில ஆண்டுகளில் ராக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் சாத்திய வாய்ப்புள்ளதாக 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு செல்லும் மனிதர்கள் பயணத்துக்கும் விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்டுகளை பயன்படுத்தலாம் என்றும் விமானங்களின் சிக்கன வகுப்புக்கான செலவில் இதை நடைமுறைப் படுத்தலாம் என்றும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் அறிவித்தது,
நியூயார்க்கிலிருந்து- ஷாங்காய் செல்ல விமானத்தில் சென்றால் 15 மணி நேரம் ஆகும். ஆனால் இந்த ராக்கெட் பயணத்தின் மூலம் வெறும் 39 நிமிடங்களாக இந்தப் பயணம் குறையும் என்றும் இதற்கான கிராபிக்ஸ் வீடியோவும் வெளியிட்டிருந்தது.
ராக்கெட் மூலம் உலகின் முக்கிய நகரங்களிடையே அதிக பட்சம் ஒரு மணி நேரத்துக்குள்ளாக பயணிக்க முடியும் என ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்திருந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ராக்கெட் திட்டம் சாத்தியமாகும் வாய்ப்புகள் உள்ளதால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வின்னி ஸ்சூட்வெல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பூமியில் எந்தவொரு இடத்துக்கும் இனிமேல் ஒரு மணி நேரப் பயணம் - ராக்கெட் தயார்!
Typography
- Font Size
- Default
- Reading Mode