ஆஸ்திரேலியாவில் பயங்கர காட்டுத் தீ- சிட்னி நகருக்கு ஆபத்து!

World
Typography

சிட்னி, ஏப்.16- ஆஸ்திரேலியாவில்  காட்டுத்  தீ  விறுவிறுவென சிட்னி நகரைச் சுற்றிச் சூழ்ந்து வருகிறது. பரவி வருகிறது. இது அந்த நகரத்தில் பெரும்பாலான இடங்களை அழித்து வருகிறது.  கடந்த சனிக்கிழமை உருவான இந்தத் தீ வேகமாக வீசும் காற்று காரணமாக பரவி வருகிறது.

இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்

இந்தத் தீ இது வரை 2.200 ஏக்கர் நிலப்பரப்பை நாசம் செய்துள்ளது. இன்னும் வேகமாக இது பரவி வருகிறது. புல்கள் இருக்கும் பகுதியை நோக்கி நகர்வதால் சிட்னியில் அதிகம் மக்கள் தொகை வகிக்கும் இடங்களில் இந்தத் தீ பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தத் தீயை அணைக்கும் பணியில் 500க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். பல தீயணைப்பு வாகனங்கள் இந்த தீயைக் கட்டுக்கு கொண்டு தயார்நிலையில் உள்ளன.

ஆனால் காற்று அழுத்தம் அதிகமாக இருப்பதால் தீ பரவும் நிலையில் இருக்கிறது.

சிட்னியில் இருக்கும் மக்களை வெளியேறும்படி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது வரை இதனால் மரணமோ- வீடுகள் நாசமோ- காயமோ யாருக்கும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS