அழகு சாதனப் பொருட்களில்  மனித கழிவுகளா..? அதிர்ச்சி!

World
Typography

லாஸ் ஏஞ்சல்ஸ், ஏப் 16-   லாஸ்-ஏஞ்சல்ஸ் நகரில் ஒப்பனை நிறுவனம் ஒன்று விற்பனை செய்த அழகு சாதனப் பொருட்களில்  விலங்கு மற்றும் மனிதக் கழிவுகள் இருந்தது கண்டறிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிறுவனத்தின் அழகு சாதனப்பொருட்களை பயன் படுத்தியவர்களுக்கு தோல் சார்ந்த பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் இந்த நிறுவனப் பொருட்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் புகாரைத் தொடர்ந்து  போலீஸ் அந்த நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைக்கு ரகசியமாக வாடிக்கையாளர்கள் போன்று  மாறுவேடமிட்டு  மலிவு விலையில் விற்கப்பட்ட அழகுச் சாதனப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

பின்னர் இவற்றை சோதனைக்கு  உட்படுத்தியதில் அபாயகரமான பாக்டீரியாக்கள் மற்றும் மனித விலங்கு கழிவுகளும் இருப்பதை கண்டு பிடித்தனர்.

இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள 21 கடைகளியிலிருந்து  பல கோடி மதிப்பிலான அழகு சாதனப் பொருட்களை கைப்பற்றி உள்ளனர். அழகுசாதனப் பொருட்களில் விலங்கு மற்றும் மனிதக் கழிவுகளைப் பயன் படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS