தாயை கூறுபோட்டு குளிர்ப் பதனப் பெட்டியில் வைத்த மகன் சரண்!

World
Typography

ஹவாய், ஏப்ரல் 18- வாக்குவாதம் முற்றியதில் தனது தாயை அடித்து கொன்றுவிட்டு, அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்ப் பதன பெட்டிக்குள் பதுக்கி வைத்திருந்த மகன் போலீசாரிடம் சரணடைந்தான்.

படிப்பைத் தொடராமல் வேலைக்குச் செல்லப் போவதாகத் தாயிடம் வற்புறுத்தி வந்ததைத் தொடர்ந்து அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் கோபமுற்ற மகன் தன் தாயை அருகில் இருந்த இரும்பைக் கொண்டு தாக்கியதில் அந்த பெண்மணி மூச்சு திணறி இறந்தார்.

பின்னர், அந்தக் கொலைகார மகனேப் போலீசுக்குத் தொடர்பு கொண்டு தன் தாயைக் கொன்று விட்டதாக கூறியுள்ளான். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீஸ்காரர்கள் துண்டுகளாக வெட்டப்பட்ட அந்த தாயின் உடல் உறுப்புகளை குளிர்ப் பதனப் பெட்டியிலிருந்து மீட்டனர்.

நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த ஆடவன் நீதிபதியிடம் எதுவும் கூறாமல் பிடிவாதமாக மௌனம் சாதித்ததால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS