ஒருத்தருக்கு 6 மனைவியர், 54 பிள்ளைகள்! பாகிஸ்தானில் அதிர்ச்சி

World
Typography

இஸ்லாமாபாட், ஏப்ரல் 19- லாரி ஓட்டுனரான 70 வயது அப்துல் மஜீட் என்பவருக்கு 54 பிள்ளைகள் பிறந்துள்ளனர் எனும் தகவல் பாகிஸ்தான் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்மையில் பாகிஸ்தானில் நடந்த மக்கள் கணக்கெடுப்பில் இந்த தகவல் கிடைத்தது.

“என் பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக நான் கடுமையாக உழைத்தேன். ஆனால், இப்போது எனக்கு வயதாகிவிட்டதால் முன்புபோல் வேலை செய்ய முடியவில்லை. பணப் பற்றாக்குறையினால் உணவு இல்லாமலும் முறையான சிகிச்சை இல்லாமலும் என் மனைவிகளும் குழந்தைகளும் இறந்துவிட்டது எனக்கு மன கஷ்டத்தை தருகிறது” என்று அப்துல் மஜீட் கூறினார்.

தனது 18ஆம் வயதில் முதல் திருமணம் செய்த அவர் இதுவரை 6 பெண்களை மணமுடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய மனைவியரில் இருவர் நோயினாலும் 12 பிள்ளைகள் உணவு பற்றாக்குறையினாலும் இறந்துவிட்டனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS