தென் தாய்லாந்தில் ஒரே நேரத்தில் 13 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்!

World
Typography

பேங்காக், ஏப்ரல் 20- தென் தாய்லாந்து பகுதியில் ஒரே நேரத்தில் 13 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்றிரவு நடந்த இச்சம்பவத்தில் இருவர் பலியாகியதோடு, மூவர் படுகாயம் அடைந்தனர்.

நேற்று இரவு 7 மணி முதல் தென் தாய்லாந்து பகுதியான பட்டாணி, சொங்கலா மற்றும் நராத்திவாத் ஆகிய பகுதிகளில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்தன. போலீஸ் நிலையங்கள், பாதுகாப்பு படையின் கூடாரங்களைக் குறி வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் கூறினர்.

இதில் நராத்திவாத் பகுதியில் மட்டும் 7 வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சொங்கலா பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்கு வெடிகுண்டுகளைப் பொருத்திக் கொண்டிருந்தபோது வெடிகுண்டு வெடித்ததால் இரு ஆடவர்கள் பலியானதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

நேற்று நடந்த இந்த தாக்குதலுக்கு யாரும் இன்னும் பொறுப்பேற்கவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS